அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு - மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கேசவன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கேசவன் (56). இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரரும் தற்போது காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கேசவன் தனது மனைவி பரிமளா (46) மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலக கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார்.



இந்தநிலையில் கேசவன் நேற்று மதியம் 3.30 மணிக்கு கோவில் முன்புறம் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கேசவன் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கேசவனை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கேசவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் அவரது உடல் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அப்போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேசவனுக்கு முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர் மயில்சாமி தலைமையில் மூவர்ண கொடியுடன் ஊர்வலமாக வந்து அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி மூர்த்தி சல்யூட் அடித்து வீர வணக்கம் செலுத்தினர்.



அப்போது தாராபுரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...