கோவை வடக்கு, மேற்கு மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆய்வு!

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்களை வழங்கிய மேயர் கல்பனா ஆனந்தகுமார், வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு, மேற்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்கு உட்பட்ட சிவாஜி காலனியில்‌ வானவில்‌ பொது அறக்கட்டளை சார்பில்‌ ரூ.1லட்சம்‌ மதிப்பீட்டில்‌ குப்பைகள்‌ சேகரிக்கும்‌ 5 தள்ளுவண்டிகள்‌, அதற்கான புதிய குப்பைத்‌ தொட்டிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ சுகாதார தூய்மை பணியாளார்களுக்கு வழங்கினார்‌.



கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பாரதியார்‌ ரோடு, எம்‌.கே.பி.காலனி பகுதியில்‌ மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணி நடைபெற்று வருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதியில்‌ புதிதாக மழைநீர்‌ வடிகால்‌ அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயார்‌ செய்ய சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.



இதேபோல், கோவை மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.34க்குட்பட்ட சிவாஜி காலனியில்‌ ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...