உடுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 லட்சம் முறைகேடு - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல், ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்த விருகல்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தில் 50 லட்சத்திற்கும் மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை அடுத்த விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் பெற்று திருப்பி செலுத்திய பிறகும் வங்கிக் கணக்கில் வரவு வைக்காமல் முறையாக ரசீது கொடுக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே விவசாயிகள் பெற்ற பயிர் கடனில் 50 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்று முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயின் கடன் ரசீது வழங்காமலும் மறுகடன் வழங்காதையை கண்டித்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது,

கடந்த எட்டு மாத காலமாக விவசாயிகள் பயிர் கடன் பெற்று செலுத்திய பிறகும் அவரது வங்கி கணக்கில் வர வைக்காமல் சுமார் 50 லட்சத்திற்கு மேல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்கடன் ரசிது வழங்க வேண்டும். மேலும் மறு கடன் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்



உடுமலை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...