உடுமலையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், லாவண்யா மருத்துவமனை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ ஆலோசனை முகாம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது.


திருப்பூர்: உடுமலை அடுத்த எலையமுத்தூர் அரசு பள்ளியில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் எலையமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில். எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில், இளைஞரணி நிர்வாகி சுபாஷ் M.ராமகிருஷ்ணன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், கோபால் வார்டு உறுப்பினர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் நெல்சன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் டாக்டர்.V. பரமசிவம் தலைமையிலான குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு செய்து அவர்களுக்கான மருந்து பொருட்கள் வழங்கினர்.



இந்நிகழ்வில் ராஜாமணி, பொன்னுசாமி, பாபு கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...