தேசிய கொடி ஏற்றிய தூய்மை பணியாளர்கள் - விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: நாட்டின் 77ஆவது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழாவிற்கு அவர்ளை அழைத்து வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் அழகுபார்த்தனர்.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை அழைத்து கௌரவித்தனர்.



பின்னர் அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.



பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...