தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் – இனிப்பு வழங்கி சுதந்திர தினம் கொண்டாட்டம்

நாட்டின் நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர பி.ஆர்.ஜி.அருண்குமார் கோவை துடியலூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



கோவை துடியலூரில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளுருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தி மரியாதை செய்தார்.



அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஐ.டி விங்க் வடக்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், வார்டு செயலளர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், காளிச்சாமி, ஜெயகுமார், கட்சி நிர்வாகிகள் கவிச்சந்திரமோகன், செல்வகுமார், செல்வம், ஐ.டி.ஐ ஜெயராஜ், அண்ணாபூரணி, பழனிசாமி, ரங்கசாமி, ரமேஷ், மோகன்ராஜ், சுப்பிரமணி, சரவணன், பாலாஜி, ஜீவா, நந்தகோபால், ரவி, செல்வராஜ், முருகேசன், ஆறுச்சாமி, சரவணபாண்டியன், சி.டி.சி செல்வம், சரவணன், வி.கே.பழனிசாமி உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...