வால்பாறையில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்!

வால்பாறையில் உள்ள நகராட்சி, நீதிமன்ற, வனத்துறை, வட்டாட்சியர், காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முக்கிய அதிகாரிகள் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.



கோவை: வால்பாறையில் உள்ள அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் நாட்டின் 77 வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதனை முன்னிட்டு, இன்று காலை வால்பாறை நகராட்சி முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் தேசிய கொடியை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.



விழாவிற்கு முன்னிலை வகித்த நகராட்சி துணைத்தலைவர் அக்காமலை செந்தில் அங்கு கூடியிருந்த அனைவருமக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் நகர மன்ற உறுப்பினர்கள் ஜெ.பாஸ்கர், மற்றும் அலுவலக ஊழியர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று நகர மைய பகுதியில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில், வட்டாட்சியர் அருள் முருகன் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

வால்பாறை காவல் நிலையத்தில் மிக சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த கொடி கம்பத்தில் இளம் ஆய்வாளர் முருகானந்தம் தேசிய கொடியேற்றி வைத்து அனைவருமக்கும் இனிப்புகள் வழங்கினார்.

கூட்டுறவு காலனியிலுள்ள வால்பாறை வனத்துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் ரேஞ்சர் மணிகண்டன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். வால்பாறை நீதிமன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் நீதித்துறை நடுவர். செந்தில் குமார் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நகரிலுள்ள அரசு கலை கல்லூரியில் முதல்வர் சிவசுப்ரமணியம் தேசிய ஏற்றி மரியாதை செலுத்தினார்.



இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 77 வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வடிவத்தை கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதே போல வால்பாறை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களிலும் திட்ட தொழிலாளர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...