விநாயகர் சதுர்த்திக்கு திருப்பூர், கோவையில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன - அர்ஜூன் சம்பத் தகவல்!

பல்லடம் அருகே நடைபெற்ற இந்து மக்கள் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அர்ஜூன் சம்பத், நாங்குநேரி சம்பவம் திமுகவினரால் தான் நடைபெற்றது என்றும், விநாயகர் சதுர்த்திக்கு திருப்பூர், கோவையில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்திக்கு திருப்பூர், கோவையில் மட்டும் 50,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதேஸ்வரன் நகரில், இந்து மக்கள் கட்சியின் செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார்.



இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் பேசியதாவது,



பிரதமர் மோடியின் முயற்சியால் வீடுகள் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நமது நாட்டின் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது. ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி தலைமை பொறுப்பேற்கும் அளவுக்கு நாடு முன்னேறி உள்ளது.

அண்டை நாடுகளில் பொருளாதார சீர்கேடு, தேசமே திவாலாகிப் போன நிலை உள்ளது. இன்று, சுதந்திர தினம் கொண்டாட உள்ள பாகிஸ்தான் உணவுக்கு கையேந்தும் நிலையில் உள்ளது. இலங்கையில் பொருளாதார பின்னடைவு, பர்மாவில் ராணுவ ஆட்சி என நமது காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளின் நிலை மோசமாக உள்ளது.

ஆனால், இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா இன்று பொருளாதாரத்தில் மேலோங்கி, உலக நாடுகளில் வளர்ச்சி பெற்ற நாடாக உள்ளது. கொரானா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்கும் அளவு நமது நாட்டின் வளர்ச்சி உள்ளது

இந்தியாவின் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் பிரச்சினை, மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சுதந்திர தின சிறப்புரை பாராட்டுதலுக்கு உரியதாக இருந்தது.

விநாயகர் சதுர்த்திக்கு திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. விநாயகர் சிலை அமைப்பாளர்களை அழைத்து தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும்.

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி வருகிறார். மணிப்பூருக்கு நேரில் சென்ற இவர் நான்குநேரிக்கு செல்லாதது ஏன்? திமுக ஆட்சியை பயன்படுத்தி, கட்டப்பஞ்சாயத்து கட்டாய வசூல் என ரவுடி தனத்தை இவர் ஊக்குவித்து வருகிறார்.

ஜாதி கலவரத்தை மையப்படுத்தி அமைந்த நான்குநேரி சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. திமுகவைச் சேர்ந்தவர்களே இந்த சம்பவத்துக்கு காரணம். திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் ஜாதியை ஒழிக்க முடியாது. சிலர் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா படம் எடுக்கின்றனர்.

சமூகநீதி, இட ஒதுக்கீடு கொள்கைகள் மாறினால் தான் ஜாதி கலவரங்கள் நீங்கும். இதற்கு, பொது சிவில் சட்டம் வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...