கணியூர் அருகே விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய திமுக எம்.பி ஆ.ராசா!

கணியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய இளைஞரை அவ்வழியாக சென்ற திமுக எம்.பி ஆ.ராசா, மீட்டு அவரது காரிலேயே வைத்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.



கோவை: கணியூர் அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வாலிபரை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, தொகுதியில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, அவிநாசியில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்றுள்ளார். அவருடன், திமுக மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல் கிருபா சங்கர் உள்ளிட்டோர் பயணித்தனர்.

அப்போது, கணியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில் கிடந்துள்ளார்.



இதனை கண்ட திமுக எம்.பி ஆ.ராசா, உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி விட்டு படுகாயமடைந்த இளைஞரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.



மயக்கமுற்ற அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சை அளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுலை அனுப்பி வைத்தார். இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றார். லாரி ஒன்றில் மீது எதிர்பாராத விதமாக வாலிபர் மோதியதனால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. கழுத்தில், கைகளில் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...