திருப்பூரில் பவளக்கொடி கும்மி குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழா - மேயர், துணை மேயர் பங்கேற்பு!

திருப்பூர் அடுத்த வினோபா நகர் பகுதியில் நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த வினோபா நகரில் நடைபெற்ற பவளக்கொடி கும்மி குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழாவில் மேயர் துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

அழிந்து வரக்கூடிய பாரம்பரிய தமிழ் கலையான கும்மி கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஏராளமான குழுவினர் கொங்கு மண்டலம் முழுவதும் பெண்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்களுக்கு பயிற்சி அளித்து அரங்கேற்ற நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தாராபுரம் சாலை பெருச்சிபாளையம் வினோபா நகர் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் 54 வது அரங்கேற்ற விழா நடைபெற்றது. வினோபா நகர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இதில், கலந்து கொண்டு ஒரு மாத காலத்திற்கு மேலாக பயிற்சி பெற்றனர்.



இந்நிலையில் இன்று 54வது அரங்கேற்ற விழா வினோபா நகர் பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மைதானத்தில் நடைபெற்றது.



பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் ஆசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான அம்மன் விஸ்வநாதன், மூத்த ஆசிரியர்கள் அருணாச்சலம், பரமசிவம், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வள்ளியை முருகன் விநாயகர் பெருமான் துணையோடு திருமணம் செய்தது முதல் ஏராளமான பாடல்களை மெட்டுக்களோடு பாடினர்.



பாடலுக்கு ஏற்றவாறு ஒரே மாதிரியான சீருடை அணிந்த சிறுவர் சிறுமியர் உட்பட பெண்கள் ஒரே மாதிரி நடனமாடி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



54வது அரங்கேற்ற விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் துணை மேயர் பாலசுப்பிரமணியம் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...