தாராபுரம் அருகே சொத்து தகராறில் தம்பியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன் - பரபரப்பு!

தாராபுரம் அடுத்த ஓடையன்காடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பழனிசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் பழனிசாமி, தம்பி ஈஸ்வரமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறில் சொந்த தம்பியை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர்கள் விவசாயி ஈஸ்வரமூர்த்தி (63) - முத்துலட்சுமி (45) தம்பதி. இவர்களுக்கு இளங்கவி என்ற மகனும், வாணிஸ்ரீ‌ என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்தில் இருந்து கறவை மாட்டில் பால் கறந்துவிட்டு பால் காரரிடம் விற்பனை செய்வதற்காக டி.வி.எஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கில் காலை 5 மணி அளவில் தோட்டத்திலிருந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தின் வெளியே வந்த பொழுது தனது சொந்த அண்ணன் பழனிச்சாமி (65) (சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்) பின்னாலிருந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அரிவாளால் வெட்டியுள்ளார்.



வெட்டு காயங்களுடன் கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தாராபுரம் போலீசார் கூறியதாவது, அண்ணன் பழனிச்சாமிக்கும், தம்பி ஈஸ்வரமூர்த்திக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணன் பழனிச்சாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறின் காரணமாக அண்ணன் தம்பியை வெட்டிக் கொலை செய்துள்ளார்.



இந்த கொலை சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான தாராபுரம் போலீசார்‌ வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஈஸ்வரமூர்த்தியின் அண்ணன் பழனிச்சாமியை தாராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் சொந்த அண்ணனே, தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...