அங்கன்வாடி மையங்களில் நேரில் ஆய்வு - குழந்தைகளுடன் கலந்துரையாடினார் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்

கோவையில் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம் பொருட்களின் தரம் குறிந்து கேட்டறிந்த அவர், குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ச்சியடைந்தார்.


கோவை: புளியகுளம் பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், பிரத்யேக மருத்துவ முகாம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கோவையில் மாநகராட்சியில் உள்ள நியாயவிலை கடைகள், அங்கன்வாடி மையங்களில் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.



அதன்படி இன்று கோவை மாநகராட்சி புளியகுளம் பகுதியில் உள்ள அமுதம் அங்கன்வாடி நிலையம் மற்றும் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, பொருட்களின் தரம் குறித்து அங்கிருந்த பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேக சிறப்பு மருத்துவ முகாமினை நேரில் பார்வையிட்டார். பின்னர் பெரியார் நகர் அங்கன்வாடி மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிற்றுண்டிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...