கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநர் - சொந்த ஊரில் பணியிட மாறுதல் வழங்க ஆணை

கோவையில் மனைவி உயிரிழந்து விட்டதால் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சொந்த ஊரிலே பணி வழங்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்த ஓட்டுநர் மனு வழங்கினார். இதனையேற்று மறுநாளே அவருக்கு பணியிட மாறுதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோவை: கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து பணியிட மாறுதல் கோரி மனு வழங்கிய ஓட்டுநருக்கு கோரிக்கை வைத்த மறுநாளே பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

கோவை சுங்கம் பகுதியில், உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நேற்று போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். அப்போது மேடைக்கு வந்த ஓட்டுநர் கண்ணன், தனது மனைவி இறந்து விட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமான கைக்குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்து, தனது சொந்த ஊரான தேனியிலேயே பணியிட மாறுதல் வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.

கைக்குழந்தையுடன் ஓட்டுனர், அமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு மேடையில் இருந்த அனைத்து அரசு அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில் அவரது கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டு அவருக்கு அவரது சொந்த ஊரிலே பணியிட மாறுதல் வழங்கப்பட்டு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கண்ணன் நாளை பெற்று கொள்கிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...