ஆயிலை வெளியேற்றும் காற்றாலைக்கு எதிர்ப்பு - பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

காற்றாலையில் இருந்து வெளியேற்றிய ஆயிலால், காய்க்கும் தன்மையை தென்னை மரங்கள் இழந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். சம்ம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுகொண்டனர்.



திருப்பூர்: பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு தராவிட்டால் ஆயிலை வெளியேற்றியை காற்றாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துங்காவி பகுதியில் விவசாயி திருமலைசாமி என்பவரின் தென்னந்தோப்பு அருகில் உள்ள காற்றாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.



இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காற்றாலையில் உள்ள சுமார் 1250 லிட்டர் ஆயில் பழுது காரணமாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.



இதனால் நன்றாக பலன் தந்து கொண்டு இருந்த தென்னை மரங்கள் தற்பொழுது கருகி வருகின்றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, பல வருடங்களாக பல இன்னல்களுக்கு இடையே தென்னை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறோம். தற்போது காற்றாலையில் இருந்து வெளியேறும் ஆயிலால் தென்னை மரங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு காய்க்கும் தன்மையை முற்றிலும் இழந்துள்ளது.



இனி காய்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் தென்னை மரத்தின் கீற்றுகள் பழுப்பு நிறமாக மாறி வருகின்றது. எனவே தென்னை மரத்தை வெட்ட வேண்டிய சூழல் தான் உள்ளது. சுமார் 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல லட்சம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் ஒன்று திரண்டு காற்றாலை நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

இதற்கு இடையில் சம்பந்தப்பட்ட காற்றாலை நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அலட்சியமாக நீதிமன்றம் சென்று இழப்பீடு வாங்கிக் கொள்ளுங்கள். எங்களால் உங்களுக்கு பதில் கூற முடியாது என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...