விவசாய நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு - மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படும் நடவடிக்கையை கண்டித்து திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக விவசாயிகள் மொட்டை அடித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நிலங்கள் கையகப்படுத்துவதை நிறுத்தாவிட்டால், சென்னையில் உள்ள தலைமை செயலத்தை முற்றுகையிடப்போவதாக தமிழ அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசால் 1963ஆம் ஆண்டு சிறு இனாம்கள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டு உழவர்கள், வீடு மனை உரிமையாளர்களின் உரிமை ஆக்கப்பட்ட இடம் ஆகிய நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையும் , வக்பு வாரியமும் தமிழ்நாடு முழுவதும் 12 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சட்டவிரோதமாக அபகரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சில பகுதிகளில் விவசாயம் செய்து வரும் நிலங்களையும் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக இணாம் விவசாயிகள், குத்தகையாளர்கள் மற்றும் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் உடமைகளுடன் தொடர்பு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு இதனை கண்டு கொள்ளாவிடில் விரைவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்கள் மொட்டை அடித்தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தொடர்ந்து மாலை வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்த நிலையில் குமரன் நினைவகத்தின் நிழலில் நின்ற விவசாயிகளை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்தபோது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...