தாராபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கயல்விழி நேரில் ஆய்வு - சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் விசாரிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தாராபுரம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.



திருப்பூர்: தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழி, கட்டிட வேலைகள் விரைவாக முடித்து தருமாறு பொறியாளரிடம் கேட்டுகொண்டார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படுகின்றதா? என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



அரசு மருத்துவ மனையில் உள்ள அவசர சிகிச்சை பரிவு, உள்நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி பெண்கள் பிரிவு, இரத்த வங்கி பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



மேலும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்க மையம் கட்டிட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.



கட்டிட பணியில் உள்ள பொறியாளரிடம் கட்டிட வேலைகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார். கட்டிடம் விரைவாகவும் உறுதியாகவும் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...