கோவை மத்திய மண்டலத்தில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு!

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ ரூ.3.95 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ பொதுகழிப்பிடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுமான பணி, தார்சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மத்திய மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.68க்கு உட்பட்ட காந்திபுரம்‌, டாடாபாத்‌, கருணா எல்லை காலனியில்‌ பாராளுமன்ற உறுப்பினா்‌ நிதியிலிருந்து ரூ.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ ஒருங்கிணைந்த குழந்தை வளாச்சித்திட்ட மைய கட்டப்பட்டு வருகிறது. ‌

இந்த கட்டுமான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.



அதனை‌ தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண்‌.66க்கு உட்பட்ட அம்மன்குளம்‌, கருப்பராயன்‌ கோவில்‌ வீதியில்‌ ஸ்வச்‌ பாரத்‌ மிஷன்‌ (SBM) திட்டத்தின் கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பொது கழிப்பிடம்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.



மேலும், வார்டு எண் 72க்கு உட்பட்ட ஆறுமுகம்‌ நகரில் நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டத்தின் கீழ்‌ ரூ.85 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 499 மீட்டர்‌ தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணியை மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு, பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.



பின்னர்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.65க்கு உட்பட்ட சிவராம்‌ நகரில்‌ ரூ.2.5 கோடி மதிப்பீட்டில்‌ குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும்‌ பணியினை நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணியை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடிக்க சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இந்த ஆய்வுகளின் போது, மாமன்ற உறுப்பினர்‌ கமலாவதி போஸ்‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, உதவி பொறியாளாகள்‌ கணேசன்‌, பாலச்சந்தர்‌, மஞ்சுளாதேவி மற்றும்‌ மாநகராட்சி அலுவலாகள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...