வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடிகர் ரஜினி ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், ஆனால் பூமியில் ஜொலிப்பது ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



கோவை: நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் சக்கைபோடு போக்குவருகிறது. இதனால் குஷியான அவரது ரசிகர்கள் à®ªà®²à¯à®µà¯‡à®±à¯ இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலில் சாதனையும் படைத்து வருகின்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் "வானத்தில் பல ஸ்டார்கள் ஜொலிக்கலாம், பூமியில் ஒரே ஸ்டார் நம்ம சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.



கோவை ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அத்துறையினர் மத்தியில் நிலவி வருகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் குறித்து மாறுபட்ட கருத்துகளை திரையுலகில் இருப்பவர்களும், விமர்சகர்களும் தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...