மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள் - உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.



கோவை: மாவீரன் ஒண்டிவீரனின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாளை முன்னிட்டு மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினர்.



தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக மாவீரன் ஒண்டிவீரன் 252 வது நினைவு நாள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஆ.மருதாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாவீரர் ஒன்டிவீரனின் திருவுருவ படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சியில் திராவிட சிறுத்தைகள் கட்சி தலைவர் பருவாய் சாமிநாதன் கலந்து கொண்டு ஒண்டிவீரன் வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைத்தார்.

அதை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு அரிசி, சேலை மற்றும் சார்ட்டுகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கம் பொதுச்செயலாளர் VPM பன்னீர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...