ரூ.5.45 கோடி மதிப்பிலான பணிகளுக்கு பூமிபூஜை - மேயர் கல்பனா பங்கேற்று தொடங்கி வைப்பு

மழைநீர்‌ வடிகால் ‌- சிறு பாலம்‌ கட்டுமானப்பணி, குழந்தை வளர்ச்சி அங்கன்வாடி மைய வளாக கட்டுமானப்பணி, தார்‌ சாலை அமைக்கும்‌ பணி என்பன உள்ளிட்ட ரூ.5.45 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌, ஆகியோர்‌ பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தனர்.



கோவை: மத்திய மண்டலம்‌, வார்டு எண் 46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன்‌ வீதியில்‌ L&T, MBDA Missile System Limited நிறுவனத்தாரின்‌ கூட்டாண்மை சமூக பொறுப்பு (CSR Fund) நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில்‌ 6 ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி அங்கன்வாடி மைய வளாக கட்டுமானப்பணிக்கு மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன்‌ வீதியில்‌ L&T, MBDA Missile System Limited நிறுவனத்தாரின்‌ கூட்டாண்மை சமூக பொறுப்பு (CSR Fund) நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில்‌ 6 ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அங்கன்வாடி மைய வளாக கட்டுமானப்பணிக்கு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தனர்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌, எம்‌.கே.பி.பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 185 மீட்டர் தொலைவிற்கு மழைநீர்‌ வடிகால்‌ மற்றும்‌ சிறு பாலம்‌ கட்டு மானப்பணிக்கு மேயர் கல்பனா, பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்‌.



அதனைத்தொடர்ந்து, மத்திய மண்டலம்‌, வார்டு எண் 46க்குட்பட்ட இரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன்‌ வீதியில்‌ L&T, MBDA Missile System Limited நிறுவனத்தாரின்‌ கூட்டாண்மை சமூக பொறுப்பு (CSR Fund) நிதியிலிருந்து ரூ.1.25 கோடி மதிப்பீட்டில்‌ 6 ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி அங்கன்வாடி மைய வளாக கட்டுமானப்பணிக்கு மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ பூமிபூஜை செய்து, பணியினை தொடங்கி வைத்தனர்.



பின்னர், வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15க்குட்பட்ட சுப்பிர மணியம்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்‌ மாநகராட்சி மற்றும்‌ 50 சதவீத appviewx தனியார்‌ பங்களிப்புடன்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.12 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை மேயர்‌, மாணவா்கள்‌ பயன்பாட்டிற்காக, திறந்து வைத்தார்‌.



மேலும்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.5க்குட்பட்ட லட்சுமி நகர்‌ (பிரதான சாலை), செல்வநாயகி அம்மன்‌ நகா்‌, அண்ணாமலை நகா்‌, மருதம்‌ நகா்‌ உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநில நிதி கழக (SFC- State Financial Corporation) திட்டத்தின்கீழ்‌ ரூ.179.10 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 2.8 கி.மீட்டர்‌ தொலைவிற்கு தார்‌ சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌,



வார்டு எண்‌.5க்குட்பட்ட முருகப்பள்ளம்‌ பகுதியில்‌ ரூ.21 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ சுமார்‌ 110 மீட்ட தொலைவிற்கு தடுப்பு சுற்றுச்சுவர்‌ கட்டுமானப்பணிக்கும்‌,



வார்டு எண்‌.9க்குட்பட்ட விநாயகபுரம்‌, கம்பன்‌ வீதியில்‌ (NSMT) நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டுத்திட்டம்‌ 2-ன்கீழ்‌ ரூ.1.98 கோடி மதிப்பீட்டில்‌ சுமார்‌ 1800 மீட்ட தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணிக்கும்‌ என ஆகமொத்தம்‌ 5.45 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கும் மேயர்‌ கல்பனா பூமிபூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சிகளின்போது மாநகராட்சி துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மண்டல தலைவர்கள்‌ .வே.கதிர்வேல்‌ (வடக்கு), மீனாலோகு(மத்தியம்‌), இலக்குமி இளஞ்செல்விகார்த்திக்‌(கிழக்கு), மாமன்ற உறுப்பினர்கள்‌ நவீன்குமார்‌, சாந்தாமணி, சரஸ்வதி, உதவி ஆணையர்கள்‌ மோகனசுந்தரி, மகேஷ்கனகராஜ்‌, செந்தில்குமரன்‌, செயற்பொறியாளர்‌ கருப்பசாமி, L&T, MBDA Missile System Limited தலைமை இயக்குநர்‌ அமுல்‌ காத்ரே, செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌, உதவி பொறியாளர்கள்‌ இளங்கோவன்‌, முத்துக்குமார்‌, சரவணக்குமார்‌, மகேஷ், ஜெயின்ராஜ்‌, கணேசன்‌, குமார்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ அரவிந்த்‌, பெளன்ராஜ்‌, சந்திரன்‌, L&T, MBDA Missile System Limited நிறுவனத்தினர்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தார்கள்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...