ஒன்றரை ஆண்டாக பணி செய்ததை நிரூபித்தால் பதவி விலக தயார் - கூட்டணி கட்சி கவுன்சிலருக்கு திமுக பகுதி செயலாளர் சவால்!

திருப்பூர் மாநகராட்சி 45வது வார்டு உறுப்பினர் பாத்திமா தஷ்ரினின் தந்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவருமான சையது முஸ்தபா, தம்மீது வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் கட்சி பணியை விட்டு விலகிக் கொள்ள தயார் என திமுக பகுதி செயலாளர் மு.க. உசேன் சவால் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 45வது வார்டு உறுப்பினர் பாத்திமா தஷ்ரின் ஒன்றரை வருட காலங்களில் பணி செய்ததாக நிரூபித்தால் பதவி விலக தயார் என திமுக பகுதி செயலாளர் மு.க. உசேன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வது வார்டு பகுதி மாமன்ற உறுப்பினராக உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த பாத்திமா தஷ்ரினின் தந்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவருமான சையது முஸ்தபா நேற்று முன்தினம் ஊடகங்களை சந்தித்தார்.

அப்போது அவர், 45 வது வார்டு பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள திமுகவின் பகுதி செயலாளர் மு க உசேன் இடையூறு ஏற்படுத்துவதாகவும், நொய்யல் வீதி பகுதியில் உள்ள 33 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.



இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திமுகவின் பகுதி செயலாளர் மு க உசேன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். 33 சென்ட் நிலத்தை அபகரிப்பதாக பொய் குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தனக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பாகப்பிரிவினை செய்ய வலியுறுத்தி வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. எனக்கு சம்பந்தமில்லாத எனது இடத்திற்கு பின்னால் உள்ள இடத்தின் வழக்கை சுட்டிக்காட்டி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

நான் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி வருவதாக ஆதாரம் அளிக்க வேண்டும். ஆதாரம் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். ஏற்கனவே இது குறித்து மான நஷ்ட ஈடு வழக்கு தொடர போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 45 வது வார்டு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார். அப்பகுதியில் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாகவே திமுக ஆட்சி அமைந்த உடன் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முன்னின்று மேற்கொண்டு வருகிறேன்.

மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு பாத்திமா தஸ்ரின் சான்றிதழ் பெற்றவுடன் பெங்களூருக்கு தனது பணியினை தொடர் சென்றுவிட்டார். மாமன்ற கூட்டம் நடைபெறும் போது மட்டும் திருப்பூர் மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு நேரடியாக வந்து மாமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பின்பு மீண்டும் பெங்களூர் சென்று விடுகிறார்.

இதுவரை வளர்ச்சிட்ட பணிகள் குறித்து எந்த ஒரு கள ஆய்வையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவரது தந்தையார் ஒவ்வொரு வளர்ச்சி திட்ட பணிகளும் முடிந்தவுடன் அந்த இடத்திற்கு வந்து ஒரு போட்டோ மட்டும் எடுத்து கொண்டு தான் மேற்கொண்டதாக விளம்பரப்படுத்தி கொண்டிருக்கிறார். மேலும் என் மீது குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் நான் கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அதே வேளையில் தற்போதுள்ள மாமன்ற உறுப்பினர் ஒன்றரை வருட காலங்களில் மேற்கொண்ட பணிகளை முன்னிறுத்தி தனது பணியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அதே பகுதியில் போட்டியிட்டு திமுக தயவு இல்லாமல் டெபாசிட் பெற்றால் தான் பதவியை விட்டு விலகிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...