தமிழ்நாடு நாள் விழாவையொட்டி பேச்சுப்போட்டி - பரிசுகளை தட்டிச்சென்ற மாணவ, மாணவியர்

அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தனித்திறனை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.


கோவை: தமிழ்நாடு விழா மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் நடத்தப்பட்ட தமிழ்நாடு நாள் விழா தொடர்பான கட்டுரை, பேச்சுப் போட்டி மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர்கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ -மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார், பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாணவ, மாணவியர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் மூலம் கடந்த மாதம் 12ம் தேதிராசவீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாண ணவியர்களுக்கும் மற்றும் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 13-07-2023 மற்றும் 14-07-2023 ஆகிய நாள்களில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ - மாணவியர்களுக்கும் என மொத்தம் 22 மாணவ மாணவியர்களுக்குக் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்வழங்கிச் சிறப்பித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000ம், மூன்றாம் பரிசாக ரூ.5000 க்கான காசோலை. பாராட்டுச் சான்றிதழ்கள்வழங்கப்பட்டன.



இதேபோல், அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000-க்கான காசோலைகளையும், இரண்டாம் பரிசாக ரூ.3,000ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000மும், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசு 2 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 4 நபர்களுக்கு ரூ 2000-க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்காக அரசுப் பணியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000ம், இரண்டாம் பரிசாக ரூ.2000-க்கான காசோலையை இரண்டு நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...