தமிழ்நாட்டை புது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம் - ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதல்வர் உறுதி!

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கியுள்ள தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில், காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் அளித்த அதிகாரத்தை வானளவியதாக நினைப்பதில்லை. திருக்குறள் போல நெறிபடுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகின்றோம். தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம் எனவும் உறுதியளித்தார்.



கோவை: தமிழ்நாட்டை புது தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம் என ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை கொடிசியா அரங்கில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா நடைபெறுகிறது. இதில் 450 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில், 100 பெண் தொழில் முனைவோர்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.



இந்த விழாவை தமிழக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.



பின்னர் இந்த நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, இந்த Start Up திருவிழா அனைத்து மண்டலங்களிலும் நடத்தப்படும். புதிய கண்டுபிடிப்புகள் தான் உலகை ஆள்கின்றன.

புதிய படைப்புகள் உருவாக்குவதில் கடைசி இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளது. இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. Start upகளை நிறுவனங்களாக முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

28 micro cluster களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றும் கூறினார். 325.64 ஏக்கரில் புதிய தொழில் பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் 5 மண்டலமாக பிரித்து ஸ்டார்ட் அப் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் புதிய ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை உருவாக்க அரசு நிதி வழங்கி வருகிறது. வருடம் வருடம் நிதியின் தொகை அதிகரித்து வருகிறது. 5 இலட்சத்தில் தொடங்கி 15 இலட்சமாக உயர்ந்துள்ளது.

தொழில் உரிமை பெறுவதற்கான சிக்கலை குறைத்துள்ளோம். புதிய இணையதளம் தொடங்கி வேகம் வேகமாக வழங்கி வருகின்றனர். அடுக்குமாடி தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான கட்டிடங்கள் உருவாக்கி வருகிறோம். 80% பணிகள் முடிந்துள்ளது. மேலும் கோவையில் 4 தொழிற்பேட்டைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழக தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசியதாவது,

இந்தியாவே வியந்து பார்க்கும் வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் START UP நிறுவனங்களின் பதிவு 3 மடங்கு அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு பல்வேறு துறைகளிலும் முதலிடத்தில் இருக்க கோவை முக்கிய பங்கு வகிக்கிறது.

நாம் TEXTILE, AUTOMOBILE, ELECTRONICS இல் முதல் இடத்தில் உள்ளோம். EV கேப்பிடல் ஆக உள்ளோம். 68% EV இரு சக்கர வாகன விற்பனையில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. முதல்வர் பயணத்தில் Medical device தொடர்பாக ஜப்பானில் கை எழுத்து இடப்பட்ட 2 மாதத்துல் பணிகள் தொடங்கி விட்டோம்.

கோவையில் Technical textile விரைவில் வளர போகிறது. மதுரையில் இதேபோல் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்தார். 1 trillion economy நோக்கி தமிழகம் பயணம் செய்கிறது. அதனால் தான் அனைவரும் முதல்வர் என்னும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரவணைத்து செல்கின்றார்.

இந்த விழாவில், காணொலி வாயிலாகவே சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு தொழிலை மேம்படுத்தியவர் கலைஞர். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்பதால் இந்த நிகழ்வை அங்கே நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டேன், அதன்படி, இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

2,300 start up தொழில் நிறுவனங்கள் மட்டும் பதிவு செய்து இருந்த நிலையில், ஆட்சிக்கு வந்த இரு வருடங்களில் மூன்று மடங்காகி 6,800 start up நிறுவனங்களாக  உயர்ந்து இருக்கின்றது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதம் 10 கோடி வரை ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அளித்த அதிகாரத்தை வானளவியதாக நினைப்பதில்லை. திருக்குறள் போல  நெறிபடுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகின்றோம். தமிழகத்தை புத்தொழில்  நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம். 

இவ்வாறு முதலமைச்சர் கூறினார். 

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த த.மோ.அன்பரசன் கூறியதாவது, இதில் 450 க்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் பங்கு பெற்றுள்ளனர். இது பெருமையானது. சிறு குறு நிறுவனங்கள் சார்பாக இந்த விழா நடைபெற்று வருகிறது. கோவையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். திறமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கி உள்ளோம். 

வருகின்ற காலங்களில் இது அதிகரிக்கும். தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து வழங்க இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பள்ளி , கல்லூரிகளில் சிறப்பு பயிற்ச்கள் ஏற்பாடு செய்து வருகிறோம்.  புதிய தொழில் முனைவர்களை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.  பாதிக்கப்பட்ட தொழில் முனைவர்களுக்கு உரிய உதவி செய்யப்படும். உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டது.  அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

 

பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது,  முதல்வர் மனதில் கோவைக்கு சிறப்பு இடம் உள்ளது. கோவைக்கு நிறைய திட்டங்கள் வரவுள்ளது. அதை முதல்வர் விரைவில் அறிவிக்கவுள்ளார். பல்வேறு ஐ டி நிறுவனங்களை கோவைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

விமான நிலையம் விரிவாக்கம் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. பருத்தி விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். மேலும் மிகப்பெரிய நிறுவங்கள் தமிழ்நாடு நோக்கி வரவுள்ளது. கோவையில் தொழில் நிறுவங்கள் வருவதற்கு நிலம் பிரச்சனை உள்ளது. அதையும் சரி செய்து கொண்டு வருவதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக 3 கோடி நிதி ஆதாரம் புத்தொழில் முனைவோருக்கு நிதியுதவியளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், தமிழ்நாடு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயலாளர் அருண்ராய், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் இதில் நடிகர் சூரியும் கலந்து கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...