வீட்டில் தஞ்சமடைந்த பெண் புள்ளி மான் - வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் வனத்தில் இருந்து வெளியேறிய பெண் புள்ளிமான் ஒன்று வழித்தெரியாமல் முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் புகுந்தது. அவற்றை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வடக்கு காப்பு காடு என்ற பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: வீட்டில் பெண் புள்ளி மான் ஒன்று தஞ்சமடைந்திருப்பதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற வனப்பணியாளர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும், புள்ளிமானை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆணைகட்டி பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெண் புள்ளிமான் ஒன்று வழி தவறி வந்து தஞ்சமடந்துள்ளதாக வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.



இதனையடுத்து வனச்சரக அலுவலரின் அறிவுறுத்தலின் பேரில் வன பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு, ஆனைக்கட்டி காவல் சுற்று, ஆனைக்கட்டி வடக்கு காப்பு காடு பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...