திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வு - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

திருப்பூரில் வேர்கள் அமைப்பு சார்பில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில், காலை ஆறு மணிக்கே பள்ளி மாணவர்கள் ஆர்வமுடம் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.



திருப்பூர்: மூளி குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிகளை வேர்கள் அமைப்பினருடன் இணைந்து பள்ளி மாணவர்களும் பங்கேற்று அகற்றினர். இதில் ஏராளமான தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர்.



திருப்பூர் மண்ணரை அருகில் வேர்கள் அமைப்பு பராமரிப்பில் உள்ள மூளி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்தநிகழ்வில், 20 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஷ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன.



இதில், அதிகாலை 6 மணிக்கே பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கு பிளாஷ்டிக் தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு வந்திருந்த அமைப்பு நண்பர்கள் குழந்தைகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்கள்.



நேற்று மூளி குளத்தில் பிளாஸ்டிக் கிளீனிங் டிரைவ் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர். வேர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த களப்பணியில் கலந்து கொண்ட அமைப்புக்கள் துப்புரவாளன், பனை காக்கும் நண்பர்கள் அமைப்பு, இளம் துளிர் அமைப்பு, Little kingdom பள்ளி, Aalaya Academy பள்ளி, இயற்கை ஏரி குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, Rotary Metal town, 'பசுமை திருப்பூர் நகரம்' அமைப்பு, நண்பர்கள் குழு அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நமக்கு இன்றைய நிகழ்வுக்கு பொருள் உதவி மற்றும் நிதி உதவி வழங்கிய அன்புடன் திருப்பூர், ஸ்ரீ அக்ஷய பாத்திரம், மாயா பவுண்டேஷன் மற்றும் அனைவருக்கும் நன்றி என வேர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...