முன்பகை காரணமாக டிரைவர் வெட்டிக்கொலை - குற்றவாளியை பிடித்து கோவை மத்திய சிறையில் அடைத்த காவல்துறை

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் முன்பகை காரணமாக டிரைவர் ரவியை கொலை செய்த செல்வராஜ் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை: திருட்டு பொருட்களை விற்பனை செய்ததை தட்டிக்கேட்டதால், டிரைவர் ரவியை, செல்வராஜ் என்பவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கடையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் செல்வராஜ் என்பவர் வேலை பார்க்கின்றனர். செல்வராஜ் திருட்டு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார் இதனை ரவி கண்டித்துள்ளார்.

இந்நிலையில் ரவி நேற்று முந்தினம் வேலைக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிகிறது. எனவே, அதிர்ச்சி அடைந்த அவரது மகன் நந்தகுமார் கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு ரவி சென்றது தெரிய வந்தது.

எனவே நந்தகுமார் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரவி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அதே கடையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் முன் விரோதம் காரணமாக ரவியை அறிவாளால் வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கைது எனவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...