நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அறிவுரை

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நள்ளிரவில் ஒற்றை யானை உணவு தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



கோவை: உணவு தேடி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் இரவில் வெளியே வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் ஒற்றை யானை உணவு தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இரவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...