நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - கோவையில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: ஏழை மாணவர்களின் மருத்துவர் ஆகுவதை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகத்தினர் கண்டன முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.



மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி- திராவிட மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருப்பு உடை அணிந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...