திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - பனியன் நிறுவன தொழிலாளி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த பனியன் நிறுவன தொழிலாளி படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



திருப்பூர்: இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற லாரி ஓட்டுநரை காவல்துறையிறனர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவண பிரபு. மதுரையை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு மேலாக திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் லட்சுமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த சரக்கு லாரியானது இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் வலது கை உட்பட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் லாரியை வடக்கு காவல் நிலையம் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...