நுகர்வோர் நீதிமன்றத்தை எப்படி அணுகுவது? - கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் குறைதீர் ஆணைய செயல்பாடுகள் குறித்த ஒரு நாள் பயிற்சியில், ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.



கோவை: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியுமான தங்கவேல், ஆணையத்தின் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் ஆணையத்தை அணுகும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.



இந்த பயிற்சியில், என்.ஜி.பி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் மாணவர்கள், ஆசியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...