மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்களை சீண்டாதே - கோவையில் போஸ்டர் ஒட்டிய திமுகவினர்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்கள சீண்டாதே #Ban NEET என்ற வாசகங்களும், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.



கோவை: மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

மருத்துவ படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் திமுக மற்றும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் திமுக மாநகர மாவட்ட இளைஞர் அணியினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில், மருத்துவம் படித்தால் தீட்டா...? எங்கள சீண்டாதே #Ban NEET என்ற வாசகங்களும், மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த போஸ்டர்கள், லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...