திருப்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - பொக்கலைன் இயந்திரத்துடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பூரில் ஆக்கிரமிட்பு பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று ஆக்கிரமிட்பு வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் எந்திரத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.



திருப்பூர்: குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை தங்களை அணைப்பாளையம் பகுதியில் இருந்து வெளியேற்றக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறினர். இதனையடுத்து காலி செய்த வீடுகளை மட்டும் இடித்து அவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரி சாலை, அணைப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தை ஒட்டிய புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் சிலர் 30 வருடங்களுக்கு மேலாக வீடுகளை கட்டி குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஆக்கிரமித்த வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும், காலி செய்பவர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமித்த வீடுகளை இடிப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் அணைப்பாளையம் பகுதிக்கு சென்றனர்.



அப்போது அங்கு குடியிருந்த பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு இன்னும் நெருப்பெரிச்சல் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் அவ்வாறு இருக்கும் நிலையில் தாங்கள் எங்கு போய் தங்க முடியும், அதுமட்டுமின்றி எங்களது குழந்தைகள் இங்கே அருகில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். தற்பொழுது நெருப்பெரிச்சல் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்தால் அங்கிருந்து பள்ளிக்கு எவ்வாறு வர முடியும், எனவே எங்களுக்கு இதே பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் அல்லது எங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பு முடியும் வரை இங்கேயே தங்க மாநகராட்சி அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.



இதையடுத்து மாநகராட்சி நிர்வாகிகள் காலி செய்த வீடுகளை மட்டும் இடித்துவிட்டு சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...