உடுமலை அருகே அரசு மதுபான கடை ஊழியர் அத்துமீறல் - வைரலாகும் வீடியோ!

உடுமலை அருகே அரசு மதுப்பானக்கடையில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் இரவு பத்து மணிக்கு மேல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



திருப்பூர்: கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக மதுவை எடுத்து செல்லும் அரசு மதுக்கடை ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி அவரை பணியிடை நீக்க செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி அரசு மதுபான கடை (2323)ல் இருந்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக அங்கு பணியாற்றி வரும் ஊழியர் இரவு 10 மணிக்கு எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானத்தை கள்ள மார்க்கெட்டில் ஊழியர் விற்பனை செய்து வருகின்றார். மேலும் இவர் பல ஊர்களில் ஏஜென்ட் வைத்து விற்பனை செய்து கொண்டுள்ளார். எனவே இவரை உரிய விசாரணை நடத்தி பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...