கோவை துடியலூர் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருந்தக வளாகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை உட்பட அனைத்து இடங்களையும் அவர் பார்வையிட்டார்.



கோவை: தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது பற்றியும், தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.



கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மருந்தக வளாகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை, மருத்துவர்களின் அறை, ஆய்வு கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள நோயாளிகளிடம் இங்கு கிடைக்க பெரும் மருத்துவ வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவர்களிடத்திலும் சில அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்காக இயங்கக்கூடிய அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் எனவும், தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களும் இங்கு வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

பல்வேறு தொழிலாளர்களுக்கு இது குறித்து தெரியாமல் வெளியில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்த அவர், அதனை ஒழிக்கத்தான், இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இங்கு ஆய்வுக்கிடங்கு, மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை மருத்துவரின் அறைகள், போன்ற அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து மருத்துவர்களிடத்தில், வருகின்ற நோயாளிகளிடம் இன்முகத்துடன், பேசி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

மருத்துவமனையைச் சுற்றியுள்ள முட்பூதர்களை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறோம் என கூறினார். கடந்த காலங்களில் இந்த மருத்துவமனைகளை யாரும் சென்று பார்த்ததில்லை நீங்கள் அனைவரும் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்யுங்கள், தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள் தொழிலாளர்கள் நலம் முக்கியம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன் என தெரிவித்தார்.

கணினி மயமாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அரசு ஈட்டுறுதி மருத்துவமனை நிர்வாக மருத்துவ அலுவலர் காஞ்சனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...