விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் - கோவையில் உற்சாகமாக கொண்டாடிய அரசு பள்ளி மாணவர்கள்

சந்திரயான் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Soft Landing முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை உலக நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர்.


கோவை: மசக்காளிப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு லேண்டிங் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கண்டு லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை கொண்டாடினர். இதில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சந்திரயான் விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. Soft Landing முறையில் தரையிறக்கப்பட்ட அந்த நிகழ்வை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பார்த்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வு குறித்து பல்வேறு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதுமட்டுமின்றி விக்ரம் லேண்டர் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்க வேண்டுமென பல்வேறு மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அந்நிகழ்வின் தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ பகிர்ந்தது. அவை பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது.

அதன்படி கோவை மசக்காளிப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு லேண்டிங் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கண்டு லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை கொண்டாடினர். இதில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அதனைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...