நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் ஆய்வு - குடும்ப அட்டைத்தாரர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்குமாறு விற்பனையாளரிடம் அறிவுறுத்தல்

கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடை, லட்சுமி மில் பணியாளர் கூட்டுறவு பண்டக சாலை, நியாய விலைக் கடை, 100 அடி சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நியாய விலைக் கடை ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை: வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.



பாப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ராமசாமி சாலையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...