மோடி ஆட்சியில் அனைவரும் தங்கள் உரிமைக்காக போராடும் சூழல் உள்ளது!

மோடி ஆட்சியில்  பெண்கள் தங்களது உரிமைக்காவும், மாணவர்கள் à®¨à®²à¯à®² கல்விக்காகவும்,  தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமைக்காகவும் பழங்குடிகள் நீதிக்காகவும் போராடி வருகின்றனர். மணிப்பூர் ஹரியானா எரிந்து கொண்டிருக்கிறது. நரேந்திர மோடி உறங்கிக்கொண்டு இருக்கிறார் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.



திருப்பூர்: மோடி ஆட்சியில் அனைவரும் தங்கள் உரிமைக்காக போராடும் சூழல் உள்ளது என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தேவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் தேளி K.காளிமுத்துவின் புதுமனை விழா திருப்பூர் மாஸ்கோ நகரில் இன்று நடைபெற்றது. இதில்அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன்கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவராஜன் பேசியதாவது, இந்தியா கூட்டணியில் அகில இந்திய பார்வார்டுபிளாக் கட்சி அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் திமுக இருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் இந்தக்கூட்டணி செயல்படுகிறது.

இந்தியா கூட்டணியின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த மாதம் 17, 18 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற்றது.அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதுதீர்மானம் எடுக்கப்பட்டது. " இந்தியா" கூட்டணியின்மூன்றாவது கூட்டம் மும்பையில் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம் இந்தியா முழுவதும் பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில், தோற்கடிக்க வேண்டுமென்பதே ஆகும். எங்கெங்கு வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம், பொதுவான நபரை வேட்பாளராக்கி பாஜகவை தோற்கடிப்போம் என்றார். பாஜக விற்கு, எதிரானவர்களின் ஓட்டுக்கள் சிதறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 33% சதவிகித ஓட்டுக்கள் மட்டுமே பாஜகவிற்கு கிடைத்துள்ளது.

மீதமுள்ள 67% ஓட்டுகள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். வருகின்ற தேர்தலில் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த 67% ஓட்டை சிதறாமல் பெறுவதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் புகழ் குறைந்து வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை, புதிய பொது நிறுவனங்கள்தொடங்கவில்லை.சமுதாய நல்லிணக்கம் இல்லை. இதுகுறித்து கேட்கும்போதும் நரேந்திர மோடி வகுப்பு வாதபிரச்சனைகளை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டினார்.

தொழிலாளர்கள், விவசாயிகள் , மத்திய வணிக அமைப்புகள் நாளைபுதுடெல்லியில் கூட்டம் நடத்துகின்றன. அவர்களுடைய நீண்ட நாள் பிரச்சனை குறித்து விவாதிக்க இருக்கின்றனர். 

மோடி ஆட்சியில்பெண்கள் தங்களது உரிமைக்காவும், மாணவர்கள்நல்ல கல்விக்காகவும், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமைக்காகவும் பழங்குடிகள் நீதிக்காகவும் போராடி வருகின்றனர்.

மணிப்பூர் ஹரியானா எரிந்துகொண்டிருக்கிறது. நரேந்திர மோடி உறங்கிக்கொண்டு இருக்கிறார். இது பாஜகவிற்கு எதிரானவர்கள் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. நாங்களும் தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...