காரமடையில் காவல்துறை சார்பில் சமூகநீதி விழிப்புணர்வு முகாம்!

கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள அன்சூர் என்ற பழங்குடியினர் கிராமத்தில் காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடையே சமூகநீதி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கோவை: காரமடை அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு காவல்துறை சார்பில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல்துறை,சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் காரமடை அன்சூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள், மக்களின் உரிமைகள் ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது தீண்டாமையை ஒழிப்போம், ஒற்றுமையை வளர்ப்போம். சேர்ந்து வாழ்வோம், சாதி ஏற்றத்தாழ்வுகளை மறந்து வாழ்வோம் என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) முரளி கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...