கோடமலை ஓசட்டி பகுதியில் சாலை மேம்பாட்டு பணியை துவக்கி வைத்த சுற்றுலா துறை அமைச்சர்!

கோடமலை அடுத்த ஒசட்டி பகுதியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள சாலை மேம்பாட்டுப் பணியின் துவக்க விழா நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சாலை மேம்பாட்டு பணிகளை துவக்கி வைத்தார்.


நீலகிரி: குன்னூர் அடுத்த கோடமலை அருகே சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஒன்றியம், கோடமலை - ஒசட்டி பகுதியில் முதலமைச்சர் ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஜெ.பிரேம்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா நேரு, பர்லியார் ஊராட்சி தலைவர் சுசிலா, துணைதலைவர் தீனதயாளன், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கா.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...