இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் எங்க ஊரான விழுப்புரத்தை சேர்ந்தவர் - அமைச்சர் பொன்முடி பெருமிதம்

தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.




கோவை: உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி. இது திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.



கோவை காளப்பட்டி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.



இதில் அமைச்சர்கள் பொன்முடியும், முத்துசாமியும் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சந்திராயன் 3 இஸ்ரோவின் இயக்குனராக இருப்பவர் எங்க விழுப்புரத்தை சேர்ந்தவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை சொல்லுவதில் தனக்கு பெருமை என்றார்.

உலக அளவில் சந்திர மண்டலத்திற்கு செல்வதில் இயக்குனராக உருவாகி இருப்பது பெருமை. அவருடைய தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினுடைய திருச்சி மண்டல பொறுப்பாளராக இருந்தவர். திமுகவை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உதயநிதி வந்ததற்கு பிறகுதான் விளையாட்டு என்பதே தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இது வாழையடி வாழை, கலைஞருக்கு பின்னால் தளபதி, தளபதிக்கு பின்னால் உதயநிதி திராவிடத்திற்கு கிடைத்திருக்கிற பெருமை என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...