உடுமலை அருகே சாலையில் உலா வந்த படையப்பா யானை - à®ªà¯Šà®¤à¯à®®à®•்கள் அலறியடித்து ஓட்டம்!

உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை , உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்டதும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: உடுமலை அருகே மறையூர் பேருந்து நிலையம் பகுதியில் படையப்பா யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே படையப்பா என்ற யானை, உடுமலை - மூணாறு சாலையில் உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டுநர்களும் அச்சமடைந்து வாகனங்களை சாலையோரம் நிறுத்தினர்.



ஆனால் அந்த யானை எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் சாலையை கடந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேயிலை தோட்டத்தை நோக்கி சென்றதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...