Startup TN தமிழ்நாடு புத்தொழில்‌ திருவிழா - கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில்‌ கோலாகலம்

"TANSEED" 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டனர்.


கோவை: வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ "TANSEED" 5.0 திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Startup TN முன் முயற்சியான "TANSEED" 5.0 ஆரம்ப நிலையில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கான நிதியுதவி அளிக்கும்‌ திட்டமாகும்‌. இந்த திட்டத்தின்‌ நிதியானது பசுமை தொழில்நுட்பம், கிராமப்புற தாக்கம்‌ மற்றும்‌ பெண்கள்‌ தலைமையிலான தொழில்‌ முனைவோருக்கு ரூ.15 லட்சம்‌ வரை மானியம்‌ மற்றும்‌ 3% பங்கு வழங்குகின்றது.

மேலும்‌ பிற துறைகளில்‌ உள்ள தொழில்‌ முனைவோருக்கு ரூ.10 லட்சம்‌ வழங்குகின்றது. இப்புத்தொழில்‌ திருவிழாவை தமிழக முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ காணொளி உரையுடன்‌ தொடங்கி வைத்தார்‌.

மேலும்‌ தமிழக குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்துறை அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ மற்றும்‌ தமிழக தொழில்துறை அமைச்சர்‌ T.R.B ராஜா கலந்து கொண்டு தலைமை தாங்கினார்‌.

அமைச்சர்‌ தி.மு.அன்பரசன்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பகத்தின்‌ தொழில்‌ முனைவோர்களான சுபத்ரா (நிறுவனர்‌ PVR Foods), ரிஃபானா சாகுல்(நிறுவனர் Myco Mushroom Hub), T.விக்னேஷ்வரன்‌ (நிறுவனர்‌, Nandha InfoTech) மற்றும் K.உதயகுமார்( நிறுவனர் Carpro Technologies) ஆகியோர்களுக்கு TANSIM -TANSEED 5.0 திட்டத்தின்‌ கீழ்‌ ரூ.15 லட்சத்திற்கான தேர்வு சான்றிதழ்களை வழங்கினார்‌.

இத்திட்டத்தின்‌ பயனாளிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி அவர்களிடம்‌ தங்கள்‌ புத்தொழில்‌ முயற்சிகள்‌ மற்றும்‌ யோசனைகள்‌ குறித்து 23.08.2023 அன்று கலந்துரையாடினர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ அவர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அதிகாரி A.V.ஞானசம்பந்தம்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்கள்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதறகாக பயன்படுத்தி கொள்வர்‌ என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...