பேரூர் திருமடத்தில் நாளை நொய்யல் திருவிழா துவக்கம் - பேரூர் ஆதீனம் அறிவிப்பு!

நாளை (ஆகஸ்ட் 25) துவங்கி 31 ஆம் தேதி வரை பேரூர் திருமடத்தில் நொய்யல் திருவிழா நடைபெற உள்ளதாகவும், துவக்க விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைக்க உள்ளதாகவும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்துள்ளார்.



கோவை: நொய்யல் திருவிழா நாளை முதல் 7 நாட்கள் நடைபெறும் என பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அறிவித்துள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுவாமி வேதானந்தா, திருவண்ணாமலை திருப்பாத சுவாமிகள், கோவை ஜீயர் சாமிகள்,திருவண்ணாமலை ராமானந்த அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் மருதாசால அடிகளார் பேசியதாவது, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நாளை முதல் 31 தேதி வரை நொய்யல் திருவிழா பேரூர் திருமட வளாகத்தில் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள துறவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துசெயல்படக் கூடிய ஒரு நிறுவனம் அகில பாரத சன்னியாசிகள் சங்கம். அதை நிறுவியவர் ராமானந்த சாமிகள். இந்த சங்கத்தின் நோக்கம் நதிகளை தெய்வீகமாக போற்றுவது நமது மரபு, எதற்காக நதிகளுக்காக விழா எடுத்து வருகிறோம்.

காவிரி குடகு முதல் காவேரிப்பூம்பட்டணம் வரை ஐப்பசி மாதத்தில் யாத்திரை சென்று நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். காவேரி புஷ்கரணி மகா மகம், நதிகளுக்கு பெருவிழா எடுத்து வந்திருக்கிறோம். பாலாற்றிலும் ஐந்து நாட்கள் விழா எடுத்திருக்கிறோம்.

அதே போல நொய்யலாற்றிலும் ஏழு நாட்கள் விழா நடத்த முடிவு செய்திருக்கிறோம். வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி நொய்யலிலே கலக்கும் ஆறு நொய்யல் ஆறு. அது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

குழந்தைகளுக்காக போட்டிகள் நடத்தி இருக்கிறோம். கல்வியியல் கல்லூரி மாணவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.

இப்பொழுது நொய்யல் பெருவிழா என்றுநாளை முதல் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 25ம் தேதி தொடக்க விழா ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு நாளும் இரண்டு கருத்தரங்குகள் நடைபெறும். அதிகாலையில் வேள்விகள் நடைபெறும்.

ஏழு மேடைகள் அமைக்கப்பட்டு ஏழு ஆராத்திகள் நடைபெறும். மிகப்பெரிய அளவில் ஆராத்திகள் நடைபெறும். கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். நொய்யல் ஆறு அறக்கட்டளை ஏற்படுத்தி இருக்கிறோம். நதிகளை தெய்வீக நிலையில் போற்ற வேண்டும். நதிகளை பாதுகாக்க வேண்டும். அதற்கான விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திரா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன், அமைச்சர் சு. முத்துசாமி, பாஜக தலைவர் அண்ணாமலைஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

நாடு முழுவதும் இருந்து சுமார் 500 துறவிகள் வந்து கலந்து கொள்ள உள்ளார்கள். அனைவருக்கும் அன்னம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நொய்யல் தூய்மைக்கு சித்ர சாவடி வரை 20 கிலோ மீட்டருக்கு எடுத்துள்ளோம். அங்கேயே கழிவுகள் சேர்கிறது. வாகனங்கள்மூலமாக தூய்மைப்படுத்துவது.

ஜல் சக்தி திட்டம் மூலம் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி அமைப்புகளும் இணைந்து இந்த செயலை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...