கோவை வேளாண் பல்கலையில் 2 தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கல்!

கோவை வேளாண் பல்கலையின் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் சார்பில் மத்திய தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை‌ நிதியுதவியுடன், தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை வேளாண் பல்கலையில் தொழில்முனைவோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக 2 தொழில்முனைவோர்களுக்கு SISFS நிதியுதவியாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌, தொழில்நுட்ப வணிக காப்பகமானது மத்திய அரசின்‌ வர்த்தக மற்றும்‌ தொழில் துறை அமைச்சம்‌, தொழில்‌ மற்றும்‌ உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை ஆகியவற்றின்‌ நிதியுதவியுடன்‌ 2022 முதல்‌ இந்திய தொழிலமுனையவோர்களுக்கான ஆரம்ப மூலதன திட்டத்தின்‌ (Startup India Seed fund Scheme - SISFS) மையமாக திகழ்கிறது.

இத்திட்டமானது தொழில்‌ முனைவோர்களின் கருத்தாக்கம், முன்மாதிரி மேம்பாடு, தயாரிப்பு பொருட்களை சோதனை செய்தல், சந்தைப்படுத்துதல்‌ மற்றும்‌ வணிகமயமாக்கல்‌ போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ வணிக கருத்தின்‌ ஆதாரம்‌ காண்பித்தல், முன்மாதிரி உருவாக்குதல்‌, தயாரிப்புகளுக்கான சாதனைகள்‌ ஆகியவற்றிற்கு ரூ.20 லட்சம்‌ வரை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும்‌ சந்தைப்படுத்துதல்‌, வணிகமயமாக்கல்‌ மாற்றத்தக்க கடன்‌ வழியில்‌ வணிகத்தை மேம்படுத்துதல்‌ ஆகியவற்றிற்கு ரூ.50 லட்சம்‌ வரை முதலீடு தொகையாக வழங்கப்படுகிறது.



485 விண்ணப்பதாரர்கள்‌ ISMC குழுவினரால்‌ திரையிடப்பட்டு இரண்டு தொழில்‌ முனைவோர்கள்‌ சந்தோஷ்‌ (நிறுவனர்‌, COCO SCIENCE) மற்றும்‌ சிரஞ்சீவி ராஜன்‌ (SSNS BIO GARDEN PVT LTD) ஆகியோரின் தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக ரூ.10 லட்சம்‌ வரையிலான நிதியுதவியை மானியமாக பெற தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்‌.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி,‌ அவர்களிடம் தங்கள்‌ புதுமை தயாரிப்பு குறித்தும்‌ அதன்‌ மேம்பாடு குறித்தும்‌ கலந்துரையாடினர்‌. மேலும்‌ முதற்‌கட்ட நிதியுதவி ரூ.6 லட்சத்திற்கான அனுமதி உத்தரவு பெற்றனர்‌. தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து கூறினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வணிக காப்பக செயல்‌ இயக்குனர்‌ மற்றும்‌ தலைமை செயல அதிகாரி ஞானசம்பந்தம்‌ ஆகியோர் கலந்து கொண்டனர்‌. வெற்றி பெற்ற தொழில்‌ முனைவோர்‌ இந்த திட்டத்தின்‌ நிதியை தங்களின்‌ தயாரிப்பு பொருட்களை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி கொள்வர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...