கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கையும் களவுமாக கைது - வாகன சோதனையின் போது காவல்துறையில் சிக்கிய கும்பல்

திருப்பூரில் ஒர்க் ஷாப்பில் பணியாற்றுக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: உடமையில் மறைத்து வைத்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் மூன்று பேர் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், 25 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த மேலும் ஒருவரும் காவல்துறையில் பிடிப்பட்டுள்ளார்.

திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் வீரபாண்டி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டிருந்த மூன்று பேரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது இரண்டு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.



உடனடியாக காவல்துறையினர் கஞ்சா வைத்திருந்த கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த சரண், முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் ஒர்க்ஷாப்பில் வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதேபோல் மீனாம்பாறை பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சி செய்துள்ளார்.



அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் 25 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது.



உடனடியாக புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த சித்திக் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த புகையிலை பொருட்களையும் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...