பட்டப்பகலில் 2 இடங்களில் நகை,பணம் கொள்ளை - நடத்துனர்கள் வீடுகளில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்

தாராபுரத்தில் இரு வேறு இடங்களில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் இரண்டு நடத்துனர்கள் வீடுகளில் பணம் மற்றும் நகை கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: முருகேசன் என்பவரது வீட்டிலும், பாலு என்பவரது வீட்டிலும் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட வேண்டும் என்று கேட்டுகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலை சபரி ஐயப்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (56). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவர் இரவு 7 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு மூலனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை 11-மணி அளவில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.



அப்போது, வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.



பீரோவில் இருந்த தங்கசங்கிலி, மோதிரம், வளையல் என மொத்தம் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகேசன் தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டியில் வசித்து வருபவர் பாலு (56). இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். பாலும் தனியாக வசித்து வருகிறார்.



இன்று மதியம் பாலு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு மேல் தளத்தில் இருந்த கதவும் உடைக்கப்பட்டிருந்தது.



உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் கலந்து கிடந்தது. பீரோவில் இருந்த 6- சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரங்களில் மெட்ரோ சிட்டி சபரி அய்யப்பன் நகர் போன்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...