ஓ.பி.எஸ் வழக்கு தள்ளுபடி - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் நடைபெற்றது.


கோவை: ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி பொது செயலாளர் தேர்வையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும்,ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்களுக்கும் தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டிலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வில் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...