புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழக அரசு வாபஸ் பெற வலியிறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று கோவையில் சிஐடியு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


கோவை: கடந்த 12 ஆண்டுகளாக எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியின் தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்டுகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது என சிஐடியு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தால் ஏராளனான மோட்டார் தொழிலாளர்கள் பாதிகப்பட்டுள்ளதாக பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இச்சட்டத்தை கடுமையாக அமல்படுத்தி வருகிறது என சிஐடியு கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தை வாபஸ்பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுக அரசு, உடனடியாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழ்நாட்டில் வாபஸ் பெற வேண்டும், அபராதம் என்பது செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, தொழிலாளிகளை கடனாளியாக்கி தொழிலையே செய்யவிடாமல் பண்ணுவதற்கல்ல என்பதை திமு.க அரசு உணர்ந்து ஆன்லைன் அபராதம், ஸ்மார்ட் பைன் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தனியார் வாகனங்களான டுவீலரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்த பின்னரும் கூட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி டூவீலர் பைக், டேக்ஸி இயங்கி வருகிறது என கூறிய அவர்கள், உயர்நீதிமன்றத்தில் ரேபிடோ பைக்டேக்ஸி பெற்றிருக்கிற தடை உத்தரவிற்கு எதிராக ஆட்டோ தொழிலாளர்களின் நலன் சார்ந்த வாதங்களை முன்வைத்த play store-ல் இருந்து ரேபிடோ மற்றும் ஓலா செயலிகளை நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியின் தொழிற்சங்க ஆட்டோ ஸ்டேண்டுகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. CITU சார்பில் ஸ்டேண்டு அமைக்க அனுமதி கேட்டால் மறுப்பது, பெயர் பலகையை அகற்றுவது, வழக்கு பதிவு செய்வது என்று கோவை மாநகர காவல்துறை கடுமை காட்டுகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆளுங்கட்சியின் தொழிற்சங்கத்துக்கு எந்தக் கட்டுப்படுப்பாடும் இல்லாமல் அனுமதி வழங்குகிறது என சாடினர். இந்நிலையை ஏற்க முடியாது எனவும், பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவிக்காத இடங்களில் பாரபட்சம் இல்லாமல் ஸ்டேண்டுகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என சிஐடியு வின் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...