மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதா விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.


கோவை: கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகள் கொட்டுவதால், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.



எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது.

ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும், பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகள் கொட்டி பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.



மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...