வால்பாறையில் 61 பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் துவக்கம்!

வால்பாறையில் உள்ள 61 ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் இன்று முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி போன்ற விதவிதமான உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள 61 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 89 பள்ளிகள் உள்ளன. இதில் 61 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 1,110 மாணவ மாணவிகள்படித்து வருகின்றனர், முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் இன்று முதல் துவக்கப்பட்டது.



இந்த நிலையில் வால்பாறை நகராட்சி சார்பாக 61 பள்ளிகளுக்கு 4 மையங்கள் அமைத்து 12 வாகனங்களில் மூலமாக உணவுகள் விநியோக செய்யப்படுகிறது, இதில் இன்று காலை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் வால்பாறையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் காலை உணவு திட்ட வளாகத்தில் இருந்து உணவுகள் கொண்டு செல்லப்பட்டது.



காலையில் இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித உணவுகள் பள்ளி குழந்தைகளுக்குவழங்கப்படும். இந்த உணவு காலை எட்டு முப்பது மணி அளவில் பள்ளிகுழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் பள்ளி நிர்வாக தலைவர் இதற்கு பொறுப்பு ஏற்று நிர்வாகத்தை செயல்படுத்துவார் என்றும் தெரிவித்தார்.

மேலும் புறநகர் பகுதியான பெரிய கல்லார், சின்னக் கல்லார், சின்கோனா, ஊபாசி, சக்தி தலனார், வாட்டர் பால்ஸ், காடம்பாறை, குரங்குமுடி, உறுளிக்கள் ஆகிய 15 பள்ளிகளுக்கு பள்ளி நிர்வாகமே காலை உணவு தயார் செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சுதாகர், மற்றும் நகர துணை தலைவர் தா.மா.செந்தில், மற்றும் 10 வாது வார்டு உறுப்பினர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...